கரூரில் 100 ஆண்டு மிக பழமை வாய்ந்த சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர் வரை ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். கிருபை திருச்சபை சார்பில் இனிப்புகளும் கேக் வழங்கப்பட்டது. இரவில் ஆலயம் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டது.


 




உலகம் எங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று அதிகாலை 4.30 மணியளவில் 25ஆம் தேதி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை எடுத்துரைத்தனர். கரூர் மாவட்டம் மாநகர பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட மிகப் பழமை வாய்ந்த சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்துவ பிறப்பு பற்றிய கிறிஸ்துமஸ் வழிபாடு நடைபெற்றது.


 




கிறிஸ்துமஸ் வழிபாட்டில் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். கிருபை திருச்சபை சார்பில் இனிப்புகளும் கேக் வழங்கப்பட்டது. இரவில் ஆலயம் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதன்மை அருள் பணி பாஸ்கர், உடன் ஆயர் தலைவர் தலைமையில், அருள் பணி ஜான் வெஸ்லி, சேகர ஆயர் முன்னிலையில் கிறிஸ்துமஸ் வழிபாடு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். திருச்சபை சார்பில் கேக்குகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.


 







இதேபோல், கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நள்ளிரவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சர்ச் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பங்குத் தந்தை மற்றும் உதவி பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடியும், ஜெபங்கள் செய்தும் கிறிஸ்து பிறப்பின் பெருமைகளை எடுத்துச் சொல்லி வழிபாடு நடத்தினர். நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சிறப்பு திருப்பலியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.