கரூரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


 


 




 


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள ஊரணி காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் குருமார்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்வதை முன்னிட்டு ஆண்டுதோறும் கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை மற்றும் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 


 




அதன் ஒரு பகுதியாக கோயில் திடலில் ஐயப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குருசாமிகள் விளக்கு பூஜையை நடத்தி வைத்தார்.  300-க்கும் மேற்பட்ட சுமங்கலிகள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்ற இந்த விளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து சுமங்கலி பூஜையும் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.