திருப்பத்துரில் ஸ்ரீ ராமருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பஜனை பாடியும் ஸ்ரீ ராமரை வழிபட்ட இஸ்லாமிய குடும்பத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பக்தி பரவச பெருவெள்ளத்துடன் நடைபெற்றது. ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்தார்.
இந்நிலையில் இந்திய முழுவதும் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைகள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பேருந்து நிலையத்தில் கந்திலி பாஜக ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் காட்டங்கரை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்டு பஜனைகள் பாடினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த காதர் பாய் குடும்பத்தினர் கலந்து கொண்டு பஜனைகள் பாடியும் ஸ்ரீராமரை கையெடுத்து கும்பிட்டும் வணங்கினர்.
இந்த சம்பவம் இந்திய திருநாட்டில் அனைவரும் சமம் என்பது போல் அமைந்தது. மேலும் இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.