"அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்" என்பது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் கட்டணமில்லா ஆன்மிகப் பயணமாகும்.
அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகள், தமிழ்நாட்டில் உள்ள ஆறு முக்கிய முருகன் கோயில்களைக் குறிக்கும். அவை: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகும்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை) ஆன்மிகப் பயணம் முழுமையாக கட்டணமின்றி ஏற்பாடு செய்யப்படுகிறது.
தகுதி :-
வயது: 60 முதல் 70 வரைஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு கீழ் இருக்க வேண்டும்.உடல்நலத்தையும் வருமானத்தையும் உறுதி செய்யும் சான்றுகள் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை
www.hrce.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெறலாம். கடைசி தேதி: 15.09.2025.
மேலும் விபரங்களுக்கு
1800 425 1757 (தொலைபேசி) www.hrce.tn.gov.in (இணையதளம்) இந்த ஆன்மிக வாய்ப்பை பயனெடுக்க தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்.
அறுபடை வீடுகள்:
திருப்பரங்குன்றம்: இது முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்துகொண்ட தலம்.திருச்செந்தூர்: சூரனை வதம் செய்த தலம்.பழனி: நவபாஷாண சிலை அமைந்த தலம்.சுவாமிமலை: முருகன் பிரம்மனுக்கு உபதேசம் செய்த தலம்.திருத்தணி: முருகர் வள்ளியை திருமணம் செய்த தலம்.பழமுதிர்சோலை: முருகன் சோலைமலை முருகன் கோயிலில் அருள்பாலிக்கும் தலம்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.
பழனி மலை
பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
சுவாமிமலை
சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
திருத்தணி
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடம் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாக நம்பப்படுகிறது. திருத்தணிக் குன்றின் மீது முருகனுக்கு நேர்ந்துவிடப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இத்தலம் மீது அருணகிரிநாதர், திருப்புகழ் பாடியுள்ளார்.