ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


 


 




ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும்




 


அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு ஆலையம் முழுவதும் வளையல் தோரங்களால் கட்டப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.


 


 




அதை தொடர்ந்து காலை முதல் தற்போது வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று வேம்பு மாரியம்மன் தங்க கவச அலங்கார காட்சியை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.


 




ஆடி மாத மூன்றாம் வெள்ளி வேம்பு மாரியம்மன் தங்க கவச அலங்கார நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.