தேர்தலுக்கு பிந்தைய வந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்துத்திணிப்பு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக தான் முன்னிலை வகிக்கிறது என்ற கேள்விக்கு:காங்கிரஸ் கட்சியின் முகவர்கள், இத்தனை நாள் உழைத்ததை விட வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 அன்று கடுமையாக உழைக்க வேண்டும். 10 ஆண்டுகளாக தேசத்தை வழிநடத்திக் கொண்டிருந்த பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் 2004இல் வாஜ்பாய் ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பு வந்தது, ஆனால் இறுதியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.இரண்டு மாதத்திற்கு முன்பு இதை தயார் செய்துவிட்டு, இந்த கருத்து கணிப்பை தயார் செய்திருக்கிறார்கள். நாளை புதிய விடியல் ஏற்படும். தேர்தலுக்கு பிந்தைய வந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்துத்திணிப்பு என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். பாஜகஎத்தனை இடங்களை பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,“150 இடங்களை மட்டுமே பாஜக பிடிக்கும்” என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.