சமீபத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டதில் நிதின் கட்காரியின் ரியாக்ஷன் குறித்த சில வீடியோக்கள் வெளியாகி பாஜகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்று ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிய, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அதனை வழிமொழிந்தனர். தேசிய ஜனநாயக் கூட்டணியின் மக்களவை தலைவராக பிரதமர் மோடியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதனடிப்படையில், பாஜக கூட்டணியின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி. நட்டா அறிவித்தார். இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மட்டும் இன்றி அக்கட்சி எம்பிக்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் பாஜகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் நிதின் கட்கரி. கட்சியின் தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளில் வகித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் தொகுதியின் எம்பியான இவர், கட்சியில் தேசிய அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார். தற்போது இவரை மையமாக வைத்தே சில வீடியோக்கள் வெளியாகி பாஜகவுக்குள் சலாலப்பை ஏற்படுத்தியுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் முதல் வரிசையில் அமர்திருந்த நிதின் கட்கரி எழுந்து நிற்க்காமல் இருந்த வீடியே வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் மோடி அமித்ஷாவின் ஆதிக்கத்திற்கு நிதின் கட்காரி ஒருபோதும் பணிந்ததில்லை, அவர் எப்போதும் அவர்களைப் புறக்கணித்து, அவர்களின் இடத்தைக் காட்டியவர். முதுகெலும்பு கொண்ட ஒரே தலைவர், பாஜக தலைவர்களின் ஓய்வற்றவர் என்பதையே இந்த பதிவு காட்டிகிறது. அவர் எப்போதும் ஆர் எஸ் எஸின் விசுவாசியாக ஆர்எஸ்எஸ் மூலமாகவே தனக்கான கேபினெட் உறுதி செய்து வருபவர். அவர் யாருக்கும் எப்போதும் அடிபணிந்தது இல்லை என்று அந்த வீடியோவை பார்த்த அவருடைய ஆதரவாளர்களின் ரியாக்ஷனாக உள்ளது. அதேபோல மோடி அமித்ஷாவின் ஆதரவாளர்கள் என்ன நிதின் கட்காரியின் ரியாக்சனை எதிர்த்தும் பதிவு செய்து வருகிறார்கள். இது பாஜகவினுடைய புகைச்சல் ஏற்படுத்தி உள்ளது மேலும் சமூக வலைதளங்களில் சூடான டாபிக்கா பேசப்பட்டு வருகிறது. மேலும் கூட்டதில் பேசிய நிதின் கட்கரி மோடியால் இந்தியாவுக்கு மட்டுமில்லை உலகத்திற்கே பெருமை என்று மோடி குறித்து பேசினார் என்பது குறிப்பிடதக்கது.