இராயபுரத்தில் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் - அதிமுக ஜெயக்குமார் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.சென்னை இராயபுரம் தொகுதி - 48 ஆவது வட்டம் - முனிராம் பாண்டியன் தெரு பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு நேரில் சென்று மக்களின் கோரிக்கையை கேட்டதோடு , சம்பத்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக சீரான மின்சாரம் வழங்கவும், தொடரும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் அறிவுறுத்தினார்.