”மதவாத அரசியல், பொய் பிரச்சாரத்திற்கு கிடைத்த வாக்குகள் அது எல்லாம்” துரை வைகோ பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழக முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வரின் கடின உழைப்பே காரணம் எனவும்,திருச்சி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம், மகளிர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்துகள் திட்டம் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றி தான் இது. திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து செயலாற்ற நான் தயார். தலைவர் வைகோ என்னை தொலைபேசியில் அழைத்து பேசிய போது, அப்பா வாழ்த்துக்கள் என்று கூறினேன், ஆனால் நான் தான் உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் நீ எதற்குப்பா எனக்கு வாழ்த்துக்கள் சொல்கிறாய் என்று கேட்டார். நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல உங்களுக்காகவும் கட்சிக்காகவும் தான் அப்பா என்று கூறினேன் தமிழகத்தில் சில தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடம் வந்துள்ளது குறித்த கேள்விக்கு,மதவாத அரசியல், பொய் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார்.