பேஷ்... பேஷ்... இது கீப்பர் ஸ்ரீஜேஷ் ஸ்பெஷல்!
போட்டிக்களத்தில் க்ளவுஸ்கள் போட்டுக்கொண்டும், ஹெல்மெட் மாட்டிக்கொண்டும் முகம் தெரியாமல் களத்தில் அரணாய் நின்ற அந்த முகத்தை காண இன்று கூகுளில் ஸ்ரீஜேஷின் பெயரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் அரணாக இருந்து வருபவர்.
ஸ்ரீஜேஷ்க்கு 36 வயதாயிற்று. இவர் ஓடவில்லை, ஒதுங்கவில்லை. களத்தில் நிற்க வேண்டுமென வேட்கை கொண்டு போராடினார். இன்று, இந்திய அணியின் வெற்றிக்கு பின்னாலும், களத்தில் வலைக்கு முன்னாலும் நின்று வென்றிருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீஜேஷின் சொந்த ஊர்.
. எதிர்பார்க்காத நேரத்தில் ஹாக்கி, ஹாக்கியில் கோல்கீப்பர் என தொடர்ந்த ஸ்ரீஜேஷின், பின் நாளில் இந்திய ஹாக்கியின் தவிர்க்க முடியாத கோல்கீப்பராக பெயர் பெறுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
போட்டி முடிய 6 நொடிகள் இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு சில நொடிகளில் ஸ்ரீஜேஷ் தடுத்த பெனால்டி, இந்தியாவின் 41 வருட கனவுக்கு போடப்பட்டிருந்த தடுப்பை விலக்கி இருக்கின்றது.
கேரளாவில் கொண்டாடப்பட்டு வந்த ஸ்ரீஜேஷ், இன்று இந்திய அளவில் கொண்டாப்பட்டு வருகிறார்.
இன்று இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு பரிச்சயமான முகமாக மாறியிருக்கிறார்.
கேரளாவில் உள்ள ஒரு தெருவுக்கு ஸ்ரீஜிஷின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.
கிரிக்கெட்டிற்கு ராகுல், ஹாக்கி விளையாட்டிற்கு ஒரு ராகுல் டிராவிட் இல்லை, இங்கு ஸ்ரீஜேஷ் ஒருவர்தான், அது இவர் மட்டும்தான்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -