Rinku singh : ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன கொல்கத்தா வீரர்..யாருப்பா இந்த ரிங்கு சிங் எனக்கே பார்க்கணும் போல இருக்கு!
ஐ.பி.எல் வருடா வருடம் ஒரு ஹீரோவை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. தற்போது ஐ.பி.எலின் 16 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைப்பெற்ற கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கான மோதலில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் 5 பந்துகளிலும் 5 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார் ரிங்கு சிங். இதன் மூலம் அவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்து அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போது பலருக்கும், யார் இந்த ரிங்கு சிங்? என்ற கேள்வி எழ தொடங்கி இருக்கிறது. ரிங்கு, உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். 25 வயாதாகும் ரிங்கு சிறுவயதில் வறுமையின் காரணமாக துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட உத்திரப்பிரதேச அணியில் இவர் இடம்பெற்று முதல் போட்டியிலேயே 83 ரன்கள் குவித்தார்.
உ.பி அணியில் சுரேஷ் ரெய்னா இவருக்கு உதவி செய்தார். 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி இவரை 80 லட்சத்திற்கு வாங்கியது.
பிறகு அபுதாபியில் நடைப்பெற்ற டி 20 போட்டியில் பி.சி.சி.ஐ அனுமதி இல்லாமல் பங்கேற்றதற்காக இவருக்கு கிரிக்கெட் ஆட மூன்று மாத தடை விதிக்கப்பட்டது.
அதன் பிறகு 2021 இல் காயத்தினால், இவர் விளையாடவில்லை. 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 42(23) அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இதனை தொடர்ந்து நடப்பு சீசனில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி அனைவரின் பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்று வருகிறார் ரிங்கு சிங்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -