Hockey India : சர்வதேச ஹாக்கி அணி பட்டியலில் முன்னேறிய இந்தியா!
ஸ்ரீஹர்சக்தி | 14 Aug 2023 12:34 PM (IST)
1
சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஆசிய ஹாக்கி சாம்பியன் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடியது.
2
ஜப்பானை தவிர மற்ற அணிகளுடன் நடந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜப்பானுடனான போட்டி டிராவில் முடிந்தது.
3
தற்போது உலக ஹாக்கி அணிகளின் சம்மேளனம் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
4
இதன்படி 2771.35 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, 2763.50 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்தது.
5
இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் 3 வது இடத்தை பிடித்தது இந்தியா.
6
ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றதால் சர்வதேச அணி பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.