மும்பையில் ஆஜரான இளம் இந்திய அணியின் கூல் பிக்ஸ்..!
சைனா மேன் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. இடது கை பந்து வீச்சாளருக்கு இந்த முறை போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுமா?
க்ருணல் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். அவர் இந்திய அணியில் தனது திறனை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற மனிஷ் பாண்டேவும் அணியில் இடம் பெற்றுள்ளார். பிப்ரவரி 2020 இல் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
பிருத்வி ஷா மற்றும் தவான் இந்தியாவின் தொடக்க ஜோடியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான சுழல் தாக்குதலுக்கு சாஹல் தலைமை தாங்குவார். அண்மையில் விஸ்வநாதன் ஆனந்திற்கு எதிராக அவர் செஸ் போட்டியில் விளையாடுவதைக் காண முடிந்தது.
பி.சி.சி.ஐ இரண்டு வெவ்வேறு தொடர்களுக்கு இரண்டு வெவ்வேறு அணிகளை தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை.
ஜூன் 28 ஆம் தேதி கொழும்புக்குச் செல்வதற்கு முன்பு இந்திய அணி கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படும். ஜூலை 6 க்குப் பிறகு மட்டுமே அணி ஒன்றாக பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும்.
அணியின் மூத்த வீரராக புவனேஷ்வர் குமார் கருத்தப்படும்போது, இந்திய அணி எவ்வளவு இளமையான அணியை கொண்டுள்ளது என்பது தெரியும்.
ஷிகர் தவான் தலைமையில் இலங்கை செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. ஜூலை 20ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.