அரை இறுதி போட்டியில் மோதும் பலம் வாய்ந்த அணிகள்..வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா?
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து அணிகளும் தங்களுடைய லீக் போட்டிகளை முடித்துக் கொண்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து அணிகளும் தங்களுடைய லீக் போட்டிகளை முடித்துக் கொண்டுள்ளது.
லீக் போட்டியின் முடிவில் முதலாவது இடத்தில் இந்தியாவும் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் கடைசி மற்றும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி இடம் பெற்று இருக்கிறது.
இதில் அரையிறுதிக்கு முதலில் தகுதி பெற்ற அணி கடைசியாக தகுதி பெறும் அணியுடன் தனது முதல் அரை இறுதி போட்டியில் சந்திக்கும் அதாவது முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும் நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் அரை இறுதிப் போட்டியில் மோதும் இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
இதுவரை நடந்த உலகக் கோப்பை வரலாற்றில் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதில்லை. வரவிருக்கும் நவம்பர் 15 அன்று அரையிறுதியில் மோதும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி எழுதுமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் சம பலத்துடன் அரை இறுதி போட்டியில் மோத உள்ளதால் போட்டியில் விறுவிறுப்பு குறையாமல் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -