2 கோல்கள் அடித்து மிரட்டிய அர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி!
2026 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் நேற்று முன்தினம், நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அணியுடன் பெரு அணி மோதியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜென்டினா அணி அரை ஆட்டத்தின் முடிவில் 2 கோல்களை அடித்து முன்னிலை வகித்திருந்தது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல்களை அடித்தார்.
அடுத்த பகுதி ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளும் மாறி மாறி கோலுக்குள் பந்தை தள்ள போராடிக்கொண்டிருந்தன. இரண்டாவது பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கமுடியாமல் திணறின.
எனினும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆர்டிக் கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.மெஸ்ஸி அடித்த கோல் ஆப் சைடு பால் என நடுவரிடம் பெரு அணியின் கேப்டன் பெட்ரா கல்லெஸ் முறையிட்டார்.
பிறகு கோலை ரீப்பிளே செய்து பார்த்த நடுவர்கள், கோல் ஆப் சைடு என தீர்ப்பு வழங்கியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மறுபுறம் பெரு அணியின் நட்சத்திர வீரர் குரேரோ அதிரடியாக விளையாடினார்.
இருப்பினும் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. மெஸ்ஸியின் அதிரடியால் வெற்றிபெற்றது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி தற்போது இன்டெர் மியாமி அணிக்காக விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -