FIFA 2023 : 2023 ஃபிஃபா கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா அணி!
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், கொலம்பியா மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின.
இரு அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்க ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கோல் போட முடியாமல் தவித்தனர்.
இரண்டாம் பாதியில் 52 நிமிடத்தில் கொலம்பியா வீரர் குஸ்மான் நீண்ட தூரத்தில் இருந்து அடித்த பந்தை கொலம்பியா கேப்டன் கேத்லினா லாபகமாக எடுத்து கோல் அடித்தார்.
இதன் மூலம் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் முதன் முதலில் கோல் அடித்த முதல் கொலம்பிய பெண்மணி என்ற சாதனையை படைத்தார் கேத்லினா.
ஜமைக்கா எவ்வளவோ முயற்சித்தும் அந்த அணியினால் கோல் போட முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கொலம்பியா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -