FIFA WORLDCUP 2022: மெஸ்ஸியின் சாதனைகள் சிலவற்றை காணலாம்..!
உலகக் கோப்பையை வென்ற ஜெர்மன் அணியின் கேப்டன் லோதர் மத்தாஸுடன் அதிக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையைப் பகிர்ந்துள்ளார். அதாவது இதுவரை 25 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாயியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் விளையாடும் போது மத்தாஸின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமெஸ்ஸி தனது முதல் மற்றும் சமீபத்திய உலகக் கோப்பை கோல்களை 16 ஆண்டுகள் 180 நாட்கள் இடைவெளியில் அடித்தார். உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்த மிகப்பெரிய இடைவெளி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16 ஆண்டுகள் மற்றும் 160 நாட்களாக உள்ளது.
உலகக் கோப்பையில் தனது பதின்பருவம், 20 மற்றும் 30 வயதுகளில் கோல் அடித்த ஒரே வீரர் மெஸ்ஸி மட்டுமே.
உலகக் கோப்பையில் 11 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவின் முதல் வீரர் மெஸ்ஸி. அவரைத் தொடர்ந்து கேப்ரியல் பாடிஸ்டுடா (10), டியாகோ மரடோனா (8), கில்லர்மோ ஸ்டேபில் (8), மரியோ கெம்பஸ் (6), கோன்சாலோ ஹிகுவைன் (5) ஆகியோர் உள்ளனர்.
உலகக் கோப்பையில் 18 முறை கேப்டனாக விளையாடி சாதனை படைத்துள்ளார் மெஸ்சி. அவருக்கு அடுத்தபடியாக ரஃபா மார்க்வெஸ் (17), டியாகோ மரடோனா (16) உள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள மெஸ்ஸி, 2014 மற்றும் 2022 ம் ஆண்டில் மட்டும் தலா 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார். இதன் மூலம், ஒற்றை உலகக் கோப்பை தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -