IND vs NZ Womens U19 WC : நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்று (27/01/2023) நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மோதிக் கொண்டன.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து ஜூனியர் அணியால் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல், தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது.
14.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதை பாராட்டியும் கொண்டாடியும் வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -