ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு, பக்தர்களுக்கு அருள்பாலித்த ரங்கநாதர்!
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தினமும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்
வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மட்டும் 18 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்
இதில் பெரியமேளம், நாதஸ்வரம், டக்கை. சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்
இந்தாண்டில் ஜனவரி 2 ஆம் தேதியான இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது
ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.
இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ரங்கநாதர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -