அமைச்சர்களின் முன்னிலையில் நடந்த திருச்சி மலைக்கோட்டை கோவிலின் மரத்தேர் வெள்ளோட்டம்!
திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇத்தகைய பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேர் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தேரின் புறப்பாடினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்தனர்.
இவர்களுடன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , மண்டலம் 3ன் தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் மோகன் ஆகியோர் தேரின் புறப்பாடினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்தனர்
தேரினை மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர்.
முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -