TN Health Indicators: தமிழ்நாட்டில் 60% பச்சிளங்குழந்தைகளிடம் ரத்த சோகை நோய் காணப்படுகிறது - தரவுகள் இங்கே
தமிழ்நாட்டில் பாலின விகிதம் சமநிலையைத் தாண்டி, பெண்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 1088 பெண்கள் இருக்கிறார்கள். முக்கிய அம்சமாக, நகர்ப்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் பாலின சமத்துவநிலை அதிகம் காணப்படுகிறது.
பச்சிளங்குழந்தைகளின் (பிறந்து ஒரு மாதம் முடிவதற்குள்) இறப்பு விகிதத்தில் 1.3 (2015-16 தரவுகளோடு ஒப்பிடுகையில்) விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதம் முதல் 59 மாதங்கள் வயது வரை உள்ள குழந்தைகள் மத்தியில் 1.6 விழுக்காடு குறைந்திருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் இந்த விழுக்காடு 4.5-ஆக குறைந்துள்ளது.
26.6% ஆண்களிடம் மட்டுமே எய்ட்ஸ் பற்றிய விரிவான விழிப்புணர்வு காணப்பகிறது. பெண்களிடம் இந்த எண்ணிக்கை 23ஆக உள்ளது
ஐந்து முதல் 59 மாதங்கள் வயது வரை உள்ள குழந்தைகள் மத்தியில் 60% பேர் ரத்த சோகை நோய் காணப்படுகிறது
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் மகப்பேறு விகிதம் 100 சதவீதமாக உள்ளது
18-49 வயதுக்குட்பட்ட பெண்கள், சராசரியாக 38% பேர் குடும்ப வன்முறையை சந்தித்து வருகின்றனர்