பாசிமணி கொடுத்த நரிக்குறவர்கள்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த முதல்வர்... புகைப்படங்கள்
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநரிக்குறவர் பகுதியை பார்வையிட்டு 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.
ழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி இல்லத்திற்கு நேரில் சென்று முதலவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அஸ்வினி மலர்ந்த முகத்தோடு முதல்வரை வரவேற்றார்.
இருளர் இன மக்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர், இருளர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இன மக்கள் குடியிருப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் மக்களை சுயமரியாதையுடன் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் இல்லாத சூழலில் அவற்றை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பழங்குடியின மக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுக்கும் பழங்குடியின பெண்
சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பணிகளும் ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டுமென அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -