Draupadi Murmu : குடியரசுத் தலைவர் முர்முவிற்கு அழைப்பிதழ் விடுத்த முதல்வர் ஸ்டாலின்!
ஜூன் மாதம் 5ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்து மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
முன்னதாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று குடியரசுத் தலைவர் 5.6.2023 அன்று சென்னை கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ளார்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள இசையளித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -