Mandous Cyclone: கொந்தளிக்கும் கடல்..சாய்ந்து கிடக்கும் மரங்கள்..சென்னையில் ஒரு காட்டு காட்டும் மாண்டஸ் புயல்!
சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காட்சியளிக்கிறது
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தண்டையார் பேட்டை, பெரம்பூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் அதிக பட்ச மழை பதிவாகியுள்ளது
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலும் அதிக மழை பெய்யக்கூடும்
கன மழை மற்றும் பலத்த காற்றினால் சென்னை நங்கநல்லூர் சாலையில் முறிந்து விழுந்த மரம்
அதே போல புளியந்தோப்பு பகுதியிலும் நேற்று மரம் முறிந்து விழுந்தது
மாண்டஸ் புயல் விரைவில் கரையைக் கடக்கும் என்பதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -