CM MK Stalin in Dubai: துபாயில் ஸ்டாலின்... மாஸ் காட்டும் தமிழக முதலமைச்சர்!
தமிழ்நாட்டிற்கு அதீக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் உள்ள முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக துபாய் சென்றிருக்கிறார்
துபாயில் நடக்கும் சா்வதேச தொழில் கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.
அபுதாபி மற்றும் துபாய் நகரங்களில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள்,வா்த்தக மற்றும் தொழில் சங்க தலைவா்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க இருக்கிறார்.
அதன்படி, ஃபராபி பெட்ரோகெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, முகமது ஏஐ வடே, ஏஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் தலைவர் ஆசாத் மூப்பன், எமார் ப்ராபர்ட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் ஹடி பத்ரி, ஹெச்.இ. ஷரஃபுதீன் ஷரஃப், ஷரஃப் குழுமத்தின் துணைத் தலைவர் ஆகிய முக்கிய தொழிலதிபர்களை சந்திக்க இருகிறார். அரேபு ஐக்கிய நாடுகளின் வணிக மற்றும் தொழில்முறை முதலீட்டாளர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களைச் சந்திக்க இருக்கிறார்.
அபுதாபியில், முபதாலாவில் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலித் ஏஐ குபைசி, அபுதாபி சாம்பர் கூட்டமைப்பின் தலைவர் அப்துல்லா முகமது அல் மசாரோய் ஆகியோர்களையும் முதல்வர் சந்திக்க உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -