Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (24.10.25)மின் தடை.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா? முழு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (24.10.2025) மின்வாரியம் சார்பில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டில் மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, இந்த மின் தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
கொடுமுடி- சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
வெண்டிபாளையம்-வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை,
பராமரிப்புக்காக திட்டமிடப்பட்ட மின் தடைக்கு முன்னதாக, சிரமத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படுவதற்கு முன்பு மக்கள் தங்கள் மொபைல் போன்கள், பவர் பேங்குகள் மற்றும் பிற அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்திருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் மின்சார பம்புகள் செயல்படாமல் இருக்கும் என்பதால், வீடுகளில் போதுமான குடிநீர் மற்றும் வீட்டு நீரை சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்