Chandra Babu Naidu: ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபு நாயுடு..உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவர் ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை ஊக்குவிக்க திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் அரசு குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
சந்திரபாபு கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலை முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
இதனிடையே சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீன் கோரி லஞ்ச ஒழிப்பு மனு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. தொடர்ந்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம், மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரக்கால இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனை அடுத்து இன்று ராஜமுந்திரி சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
வெளியே வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -