Droupadi Murmu : மதுரையில் குடியரசு தலைவர்..கும்ப மரியாதை செய்து பலத்த வரவேற்ப்பு அளித்த அரசு அதிகாரிகள்!
குடியரசுத்தலைவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழகத்தில் 2 நாட்கள் பயணமாக குடியரசுதலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட நிலையில் தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்
அங்கு கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தற்காலிக ஓய்வறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்
கோவிலுனுள் வருகை தந்தபோது இந்து அறநிலையத்துறை சார்பில் முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் முரளிதரன், அமைச்சர் மனோதங்கரஜ், கோவில் அறங்காவல் சார்பில் தக்கார் கருமுத்துகண்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கோவிலுக்குள் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதலில் அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார் அப்போது கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது
குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் குங்குமம் பிரசாதத்துடன் மீனாட்சியம்மன் சிலையும் வழங்கப்பட்டது
சாமி தரிசனம் முடித்த பின்னர் அழகர்கோவில் ரோடு பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு கார் மூலமாக புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக கோவை செல்கிறார்
முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் வரவேற்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -