Health Identity Card: ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை (National Digital Health Mission)) பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்து, உரையாற்றினார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதன்மூலம் பயனாளிகள் அனைவருக்கும் தனித்தனி டிஜிட்டல் அடையாள எண் வழங்கப்பட்டு சுகாதார சேவைகள் அளிக்கப்படும்
இந்த சுகாதார அடையாள அட்டை, மக்களின் மருத்துவ கணக்காக செயல்படும் (Health Records) இந்த அடையாள அட்டையுடன் தனிநபர் மருத்துவ ஆவணங்கள் (Health Records) இணைக்கப்படுவதுடன் செல்பேசி செயலி உதவியுடன் அவற்றை அணுகமுடியும்
சுகாதார தொழில்சார் நிபுணர்களின் பதிவேடு (Healthcare Professionals Registry) மற்றும் சுகாதார வசதிகளின் பதிவுகள் (Healthcare Facilities Registries) , நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மருத்துவர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக இது செயல்படும்
மருத்துவர்கள்/ மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குபவர்கள் உள்ளிட்டோர் எளிதான பணியை மேற்கொள்வதை இது உறுதி செய்யும்
ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்க சாண்ட்பாக்ஸ் (Ayushman Bharat Digital Mission Sandbox) தேசிய மின்னணு சுகாதார சூழலியலில் பங்குகொள்ள விரும்பும் தனியார் துறையினர் உள்ளிட்ட நிறுவனங்கள், இயக்கத்தின் கட்டமைப்பு தொகுப்புடன் முறையாக இணைவதற்கு தொழில்நுட்பம் மற்றும் பொருட்களின் சோதனைக்கான திட்டமாக செயல்படும்
ஒரே கிளிக் மூலம் பொதுமக்கள் சுகாதார வசதிகளை அணுக முடியும்.
130 கோடி ஆதார் எண்கள், 118 கோடி செல்பேசி சந்தாதாரர்கள், சுமார் எண்பது கோடி இணையதள பயனாளிகள், சுமார் 43 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுடன் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உள்கட்டமைப்பு இணைப்பு செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -