Singara chennai 2.0 : நம்ப மேயரா இது..? இத்தாலியில் சென்னை மாநகரின் மேயர் பிரியா!
சென்னையில் நாள்தோறும் டன் கணக்கில் தேங்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதற்காக திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேயர் பிரியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார் மேயர் பிரியா.
அப்போது, அந்த தொழில்நுட்பம் செயல்படும் விதம், சென்னையில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் மேயர் கேட்டறிந்தார்.
இத்தாலியை தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிலும் மேயர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது
இதையடுத்து, வரும் 24ம் தேதியன்று இந்த குழு சென்னை திரும்புகிறது. தொடர்ந்து, சென்னையின் புவியியல் அமைப்புக்கு ஏற்ப, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை மாநகராட்சியில் அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -