Michaung Cyclone Effects : சின்னாபின்னமான திமுக கோட்டை.. மிக்ஜாம் புயல் செய்த வேலையை பார்த்தீங்களா?
2015 ஆம் ஆண்டில் பெய்த தொடர் மழையால் சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின், மிக்ஜாம் புயலால், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. 2015 ஆம் ஆண்டில் சேதத்திற்கு உள்ளான அனைத்து பகுதிகளும் இந்தமுறை இரண்டு மடங்காக பாதிப்பு அடைந்தது.
குறிப்பாக திங்கட்கிழமை காலையில் ஒரு சில மணி நேரங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டு போனது.
திமுக கோட்டை என்று அழைக்கப்படும் சைதாப்பேட்டையிலும், மழை நீர் தேங்கியது.
தார் சாலையாக இருந்த தெருக்கள், தண்ணீர் சாலையாக மாறியது. இதனால் இருசக்கர வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. அத்துடன் கார்களும் சேதத்திற்கு உள்ளானது.
மழையுடன் பலத்த காற்று அடித்ததால், மரங்கள் முறிந்து சாலைகளில், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின் இருக்கும் ஸ்ரீநகர் காலனிதான் இது...
மறைமலை அடிகளார் பாலத்தின் அருகே இருக்கும் அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பாலத்தில் நின்று பல மக்கள் ஆறை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -