Drinks For Healthy Skin: பளபளப்பான சருமம் வேண்டுமா? எனர்ஜி ஜூஸ் லிஸ்ட்!
காலையில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை முதலில் பருகுவது சருமத்திற்கு மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நம் சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெல்லிக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மஞ்சள் பால் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பாலில் சிறிது இஞ்சியை கலந்து பருகலாம்.
உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் உங்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். இது மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ளது.
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சருமம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இது இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பது ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் என சொல்லப்படுகிறது. இதனுடன் சிறிது தேனையும் சேர்த்துப் பருகலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -