Scented Candles : வாசனை மெழுகுவர்த்திகள் உடலுக்கு கெட்டதா? தெரிஞ்சிக்கலாம் வாங்க!
156 வகை வாசனை மெழுகுவர்த்திகள் சந்தைகளை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, லாவண்டர், ரோஸ்மேரி, வெண்ணிலா, ஏலக்காய் உள்ளிட்ட வகைகளில் கூட மெழுகுவர்த்திகள் இருக்கிறது.
வாசனை மெழுகுவர்த்தியை அறையில் ஏற்றுவதால் அறையின் சுற்றுச் சூழல் நன்றாக இருப்பதாகவும், மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
ஆம், தொடர்ந்து 3 அல்லது 4 மணி நேரம் எரியும் வாசனை மெழுகுவர்த்தியை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து வெளிட்ட பல பதிவுகளின்படி, வாசனை மெகுகுவர்த்திகளை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைப்விப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான மெழுகுவர்த்திகள் சிகரெட்டை போலவே நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.
மெழுகுவர்த்திகள், குறிப்பாக வாசனை மெழுவர்த்திகள் தலைவலியை ஏற்படுத்தும். ஏனென்றால் நாம் குறைந்தது 4 மணி நேரம் மெழுகுவர்த்தியின் புகையை சுவாசிப்பதால் தலைவலியை ஏற்படுத்துகிறது.
நிபுணர்கள் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் வாசனை மெழுகுவர்த்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறுகின்றனர்
மெழுகுவர்த்திகளை பயன்படுத்தும்போது அதிக தரமுடைய, இயற்கையான வாசனைகள் நிறைந்த மெழுவர்த்திகளை பயன்படுத்த வேண்டும்.