பழங்களைச் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா? - சில அறிவுரைகள்!
பழங்களை சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம், இல்லையெனில் பழங்களின் முக்கிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.
பழங்களின் ஒரு முக்கியமான பண்பு என்னவென்றால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது அவை எளிதில் செரிமானத்துக்குத் தயாராகிவிடும். பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நச்சுத்தன்மை உருவாகும்.
பழங்கள் செரிமான சாறுகளால் புளிக்க ஆரம்பிக்கும், இது நோய்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும், உணவுடன் சாப்பிடக்கூடாது.
உறங்கச் செல்வதற்குச் சற்று முன் உணவு உட்கொள்ளும் போது நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். பழங்களின் உட்கொள்ளலுக்கும் இது பொருந்தும்.
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட பழங்கள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள், இதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது செரிமான மண்டலத்தின் பிஹெச் அளவு சமநிலையில் இல்லாமல் போகும். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட்டால் இது பெரும்பாலும் இருக்கும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது பிஎச் சமநிலை மாறி வயிற்றின் அமிலத்தன்மை குறையும். இது வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.