Beetroot Uttapam: ருசியான பீட்ரூட் ஊத்தாப்பம் - ரெசிபி!
ஒரு துருவிய பீட்ரூட். சிறிய துண்டு இஞ்சி. கொஞ்சம் தேங்காய் துருவல் ஆகியன சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதை கெட்டியான மாவில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு தோசை தவாவை சூடேற்றி. அதன் மீது எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி கொஞ்சம் மொந்தையாக வார்க்கவும்.
தோசையின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியனவற்றை சேர்க்கவும்.
சுற்றிலும் விருப்பத்திற்கு ஏற்ப எண்ணெய்யோ நெய்யோ சேர்க்கவும். பின்னர் தோசையை மூடிவைத்து வேகவிடவும். 2 நிமிடங்களில் மீண்டும் இன்னொருபுறம் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும்.
ஊத்தாப்பத்தின் மீது சில மல்லி இலைகளை தூவிவிட்டு தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால். காலை உணவு முழுமையானதாக அமையும்.
இதே மாவைக் கொண்டு பீட்ரூட் இட்லியும் ஊற்றலாம். பீட்ரூட், கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இந்த வண்ண வண்ண இட்லி தோசையை நிச்சயம் புறக்கணிக்க மாட்டார்கள்.
பீட்ரூட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
பொட்டாசியம் அளவை பராமரிக்க உதவுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -