Healthy Foods : இரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?
அனுஷ் ச | 17 Aug 2024 11:35 AM (IST)
1
ஆப்பிள், பீட்ரூட்,கேரட்டை சாறாக அரைத்து ABC ஜூஸ் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து வாரத்திற்கு 2 முறை குடிக்கலாம்.
2
தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகை கீரை, முருங்கை கீரை சூப், கீரை பொரியல் சேர்த்து கொள்ள வேண்டும்.
3
தினமும் இரண்டு கருப்பு திராட்சையை இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த திராட்சையை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் குடிக்கலாம்.
4
அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் வாரம் ஒரு முறையோ இரண்டு முறையோ ஆட்டின் சுவரொட்டி, ஈரல் பகுதியை தனியாக வறுத்து சாப்பிடலாம்.
5
அதே போல் நீர் ஆகாரமாக எடுக்க நினைத்தால் அத்திப்பழம், மாதுளை பழம் சாறு குடிக்கலாம்.
6
சுத்தமான தேனுடன் பேரிச்சை பழத்தை தினமும் 2 சாப்பிடலாம்.
7
பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட்டை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்