Dhokla Recipe: என்னது..குதிரைவாலி அரிசியில் டோக்ளா செய்யலாமா? இதோ ரெசிபி!
என்னென்ன தேவை..குதிரைவாலி அரிசி - 1 கப் (250 மி.லி கப்) ஜவ்வரிசி - 1/4 கப் பொடித்த கல் உப்பு - 1 ஸ்பூன் சர்க்கரை - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன் புளித்த தயிர் - 1 கப் (250 மி.லி கப்) தண்ணீர் - 1 கப் ஈனோ ப்ரூட் உப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் தூள், மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதாளிப்பு செய்ய எண்ணெய் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 தேக்கரண்டி டீஸ்பூன் வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 கீறியது கறிவேப்பிலை
குதிரைவாலி டோக்ளா செய்ய குதிரைவாலி அரிசியை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து தனியே ஆறவிடவும். ஜவ்வரிசியை வறுத்து ஆற வைக்கவும். மிக்ஸி ஜாரில் குதிரைவாலி அரிசியை நன்றாக பொடித்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். இதோடு ஜவ்வரிசி பொடித்து சேர்க்கவும். என்ணெய், உப்பு, புளித்த தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம் .
15 நிமிடங்கள் ஊறிய பிறகு, இந்த மாவை அகண்ட பாத்திரத்திரத்தில் வாழை இலை வைத்து அதில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை சேர்க்கவும்.
இதை இட்லி பானையில் 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்திருக்கும். இதை சிறிய துண்டுகளாக வெட்டி. தாளித்து கொட்டி சூடாக சாப்பிடவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -