Garlic Chutney: சுவையான பூண்டு சட்னி; எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் பூண்டு - 50 கிராம் குழம்பு மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - ஒரு குழிக கரண்டி கடுகு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி - ஒரு கொத்து.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூண்டை மேல்தோல் மட்டும் உரித்து மிக்ஸியில் போடவும். அதனுடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள்த்தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் 50 மிலி தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப் பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான திடீர் பூண்டு சட்னி தயார்.
இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சூடான் சாதத்தில் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதயநோய் மற்றும் பக்க வாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கி றது. இது உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -