Skincare: ஆரோக்கியமான சருமத்திற்கு துளசியை எப்படி பயன்படுத்தலாம்?
'மூலிகைகளின் ராணி' என்றும் குறிப்பிடப்படுகிறது. துளசி
யுர்வேத மருந்துகளின் ஒரு பகுதியான துளசி இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கிறது. இப்படி பல நன்மைகளைக்கொண்டுள்ள துளசி, உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
துளசி பளிச்சென்ற சருமத்தை பெற உதவும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இது இயற்கையாக சருமத்தை பிரகாசமாக்குகிறது.
முகத்தில் தோன்றும் பருக்களிலிருந்து விடுபட, இந்த மூலிகையை உங்கள் சருமப் பராமரிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் விலையுயர்ந்த ஆல்கஹால் நிரப்பப்பட்ட ஸ்கின் டோனருக்கு மாற்றாக வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த துளசி டோனர் மூலம் உங்கள் சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுங்கள்.
துளசி இலைகளின் துவர்ப்பு தன்மையானது அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவும். இது சருமத் துளைகளை இறுக்குவதன் மூலம் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி தோல் அமைப்பை மேம்படுத்துகிறது,