Diabetes Care : நீரிழிவு நோய் இருக்கவங்க கூட இந்த பானங்களை குடிக்கலாம் .. எந்த பிரச்னையும் வராது!
இயற்கையாக கிடைக்கும் இளநீரில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. பொட்டாசியம், அமினோ அமிலங்கள், பி வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்களும் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுதினா ஜூஸில் சர்க்கரைகள் எதுவும் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லை. செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.புதினா இலைகளுடன், சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
உளுந்துமாவு கஞ்சி பாரம்பரிய பானமாகும். தண்ணீர், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, வறுத்த சீரக தூள் மற்றும் புதினா இலைகளையும் இதில் சேர்க்கலாம். இது இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவலாம்
கோடையில் எளிதில் கிடைக்கும் பானங்களில் ஒன்று லஸ்ஸி. லஸ்ஸி செய்வது மிகவும் எளிது. தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து, வேண்டுமென்றால் ஐஸ் கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.
கோடையில் எலுமிச்சை சாறை கண்டிப்பாக குடிக்க வேண்டும். சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை சாறு இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது.
விளாம்பழம் ஜூஸில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது .மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இந்த பழத்தின் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -