Cucumber Benefits : வெள்ளரிக்காயில் உள்ள அற்புத ஆரோக்கிய நன்மைகள்!
96% நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், உடலை நீரோட்டமாக வைக்க உதவுகிறது. கோடையில் பலருக்கு எளிதில் நீரிழப்பு ஏற்படலாம், அவர்களுக்கு வெள்ளரி நல்ல ஆகாரமாக அமைகிறது. உடலுக்கு தேவையான குளிர்ச்சியை வெள்ளரி அளிக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளரியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதிலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இதயம் சார்ந்த நோய் ஏற்படாமல் குறைக்கலாம்
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சருமத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வெள்ளரிக்காய் சாற்றைப் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.இவை சுருக்கங்களை குறைக்க உதவலாம்.
வெள்ளரிக்காய் கண், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரி துண்டுகளை வெட்டி 10 நிமிடம் கண்களில் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். அத்துடன் கருவளையங்களும் குறையலாம்
அதுமட்டுமல்லாமல் வெள்ளரிக்காயில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வெள்ளரிக்காய் சிறந்த உணவாய் அமைகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. அதே நேரத்தில் குறைந்த கலோரிகளை கொண்ட வெள்ளரியை, உடல் எடையை குறைப்பவர்கள் டயட்டில் சேர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -