IND vs WI: சதமடித்த ரோஹித் மற்றும் ஜேய்ஷ்வால்..தத்தளிக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
உலக டெஸ்ட் சா-ம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு, கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்த, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி, டொமினிகாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 31 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 12 ரன்கள் எடுத்து இருந்தபோது சந்தர்பால் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.இதனால், 64.3 ஓவர்களுக்கு 150 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஷ்வி ஜெய்ஷ்வால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் 23 ஓவர்கள் விளையாடிய இந்த ஜோடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை சேர்த்தது.
முதல் இன்னிங்ஸில், 70 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. நிலைத்து நின்று ஆடிய முதல் விக்கெட்டிற்கான கேப்டன் ரோகித் சர்மா - ஜெய்ஷ்வால் ஜோடி, தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.அறிமுக விரரான ஜெய்ஷ்வால் தனது போட்டியில் அரைசதம் விளாசிய வேகத்திலேயே, சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரோகித் சர்மாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில், 103 ரன்கள் எடுத்து இருந்தபோது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 229 ரன்களை குவித்தது. இதையடுத்து வந்த சுப்மன் கில் வெறும் 6 ரன்களில் நடையை கட்ட, ஜெய்ஷ்வால் உடன் ஜோடி சேர்ந்து கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியை காட்டிலும், இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஷ்வால் 143 ரன்களுடனும், கோலி 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -