நாளை வெளியாகும் விஷால் 34 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
2002ல் தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஹரி சாமி, சிங்கம், வேல், பூஜை, கோவில் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டார்.
இயக்குநர் ஹரி இயக்கும் படங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.அதிரடியான சண்டை காட்சிகள் நகைச்சுவைக்கென தனியான டிராக் குடும்ப உறவுகளை சுற்றி நடக்கும் கொண்டாட்டங்கள், பாடல்கள் என கமர்ச்சியல் படத்திற்கான அத்தனையும் இருக்கும்.
இந்நிலையில் நடிகர் விஷாலை வைத்து இயக்குனர் ஹரி ஒரு படம் இயக்கப்போவதாக தகல்கள் வெளியாகின.
இதையடுத்து ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் இதற்கு முன்பு தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனைபடைத்தது.
தற்போது இவர்கள் இருவர் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக விஷால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுருக்கிறார்கள்