Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay Movies : விஜய் படங்களும் அதன் சர்ச்சைகளும்..குட்டி ஸ்டோரி சொல்பவரை பற்றிய ஒரு குட்டி அலசல்!
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான 'புதிய கீதை' திரைப்படத்திற்கு முதலில் 'கீதை' என பெயரிடப்பட்டது. விஜய் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் படத்திற்கு கீதை என பெயரிடக்கூடாதென்று இந்து அமைப்பை சார்ந்தவர்கள் எதிர்பை தெரிவித்தனர்.
சுறா திரைப்படம் நஷ்டத்தை உருவாக்கியதால் ' காவலன் ' திரைப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் சிலர் எதிரிப்பு தெரிவித்தனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருக்கிறது என பலர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி துப்பாக்கி படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தது.
விஜய் மக்கள் இயக்கம் உருவான நேரத்தில் தலைவா திரைப்படத்தின் போஸ்டர்கள் 'டைம் டூ லீட்' என்ற வாசகத்துடன் வெளிவந்தது. இது தமிழக அரசிடம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மற்ற மாநிலங்களில் கூறப்பட்ட தேதியில் படம் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 11 நாட்கள் கழித்து வெளியானது.
கத்தி திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது எனக் கூறி சர்ச்சையானது. அதன் பின்பு படம் வெளியான பிறகு 'அறம்' படத்தின் இயக்குனர் கோபி நயனார் ஏ.ஆர் முருகதாஸ் என்னுடைய கதையை திருடிவிட்டார் என்ற பிரச்சனையை கிளப்பினார்
புலி படத்தின் ரீலீஸ் நேரத்தில் விஜய் மற்றும் தயாரிப்பாளர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதனால் புலி படத்தின் அதிகாலை காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது.
தெறி படத்தின் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஒப்பந்தம் ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அதனால் சில முக்கியமான பகுதிகளில் திரைப்படம் வெளியாகவில்லை.மெர்சல் திரைப்படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பாஜக வினரால் பெரிதும் சர்ச்சையானது. அதன் பின்பு பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இறைச்சி வெட்டும் கட்டையில் விஜய் கால் வைத்து உட்கார்ந்திருப்பார். இதற்கு வியாபாரிகள் சங்கத்தினர் எதிரிப்பு தெரிவித்தனர்.
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும், இலவசப் பொருட்களை நெருப்பில் எறிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்தது. அதன் பின்பு அத்திரைப்படத்தின் கதை என ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய மக்கள் தொடர்பான காட்சிகளால் சில அரபு நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது.
மாஸ்டர் திரைப்படத்தின் போது வருமான வரித்துறையினர் படபிடிப்பு இடையில் விஜய்யை தங்களது காரில் நெய்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர். அதன் பின் நெய்வேலியில் ரசிகர்கள் திரண்ட சம்பவம் வைரலானது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -