Viduthalai 1& 2 : வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்ட கௌரவம்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த சூப்பர் சம்பவம்!
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் விடுதலை பார்ட் 1.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நடுத்தர மக்களின் மீது நடத்தப்படும் அதிகார அடக்குமுறையை மையமாக வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் பாராட்டுகளை குவித்தது.
விடுதலை பார்ட் 1 மற்றும் பார்ட் 2 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. மேலும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன.
உலகின் மிகவும் மதிப்புமிக்க ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரையுலகை பிரதிநிதிப்படுத்துவது பெருமையளிக்கிறது என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசி இருந்தார்.
இதற்காக தொடர்ச்சியாக 5 நிமிடங்களுக்கு வெற்றிமாறனுக்கு கைதட்டல்கள் வழங்கி கௌரவித்தனர். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -