Vani Jayaram : கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இனிய குரலால் வசீகரித்த வாணி ஜெயராம் பற்றிய தகவல்கள்..
78 வயதான வாணி ஜெயராம், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, உருது என 19 மொழிகளில் பாடியுள்ளார்.
வேலூரில் பிறந்த இசை வாணி, இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை வென்றுள்ளார்
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களிடமிருந்து சிறந்த பின்னணி பாடகிக்கான விருதையும் பெற்றுள்ளார்
தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை அமைப்பாளர்களுடன் பணி புரிந்துள்ளார்.
மல்லிகை என் மன்னன் மயங்கும், நித்தம் நித்தம் நெல்லு சோறு போன்ற பாடல்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்
வாணிக்கு, பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விருதைப் பெறுவதற்கு முன்பே வாணி ஜெயராம் உயிரிழந்துள்ளது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -