Blue Tick: 'இருந்தாலும் கடல முத்து ரொம்ப ஸ்ட்ரிட்டு பா..'பணம் செலுத்தாத நட்சத்திரங்களின் ப்ளு டிக்கை நீக்கிய மஸ்க்!
இந்த நவீன மயமான உலகில் சமூக வலைதளங்களின் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அதிலும் ட்விட்டரின் பங்கு மிக முக்கியமானது.
முதலில் ட்விட்டரில் பிரபலங்கள் உட்பட பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு நீல நிற குறியீடு இலவசமாக அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே ட்விட்டரின் தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்றதும், இந்த நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையில் பணம் செலுத்தாத ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கு ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
தற்போது, கட்டணம் செலுத்தாத பயனாளர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலின், எம்.எஸ்.தோனி, ரஜினிகாந்த், விராட் கோலி, மற்றும் பல முன்னணி பிரபலங்களும் அடங்குவர்.