Watermelon mojito recipe : கொதிக்கும் வெயிலுக்கு தாகத்தை தீர்க குளு குளு தர்பூசணி மோஜிட்டோ!
மே மாத இறுதியை தொட்டாலும் வெயில் இன்னும் குறைந்த மாதிரியில்லை. இந்த சீசனில் சுற்றி முற்றி எங்கு பார்த்தாலும் தர்பூசணி கிடைக்கும். அதை வைத்து தர்பூசணி மோஜிட்டோ செய்வது எப்படி? இங்கு பார்க்கலாம்...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : தர்பூசணி, புதினா இலை, எலுமிச்சை சாறு, சர்க்கரை சிரப், ஐஸ் கட்டிகள், சோடா.
செய்முறை : முதலில் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு சுகர் சிரப்பை தயார் செய்து கொள்ளவும்.
அதன் பிறகு, ஒரு க்ளாசில் தர்பூசணி துண்டுகளை சேர்த்து கொள்ளவும். அதன் பின், புதினா இலை, லெமன் ஜூஸ் மற்றும் சுகர் சிரப் சேர்த்து தர்பூசணியை நன்றாக மசித்து கொள்ளவும்.
அதன் பின், சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இறுதியாக ஐஸ் கட்டி சேர்த்து பருக தயாராகிவிடும் தர்பூசணி மோஜிட்டோ!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -