Top Grossing Movies : ஜவான் முதல் விக்ரம் வரை.. அதிக வசூலை ஈட்டிய தமிழ் இயக்குநர்களின் படங்கள்!
பாலிவுட் திரையுலகில் கால் பதித்த அட்லீ, தனது முதல் ஹிந்தி படத்திலேயே 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டினார். இப்படத்தில் ஷாருக்கான், நயன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து இருந்தனர். ரூ.1000 கோடி வசூல் ஈட்டிய ஒரே தமிழ் இயக்குநர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஷங்கர் - ரஜினி கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 2.0. உலக அளவில் ரூ 699 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரூ.600 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
தமிழ் சினிமாவின் கனவை நிறைவேற்றிய மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 உலகளவில் ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம் 100 நாட்கள் ஓடி உலக அளவில் ரூ.430 கோடியை வசூல் செய்தது.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான விஜய்யின் லியோ படம் முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ரூபாயை வசூல் செய்தது. இப்படம் பெரிய வசூலை ஈட்டுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -