Year Ender 2023 : 2023ல் யூடியூப் வியூஸ்களை தெறிக்க விட்ட டாப் 5 தமிழ் பாடல்கள்!
2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகவும் அருமையான ஒரு ஆண்டாக இருந்தது. ஏராளமான திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில், கடந்த ஆண்டு வெளியான படங்களில் இடம்பெற்ற பல பாடல்கள் சக்கை போடு போட்டது. அப்படி யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 பாடல்கள் என்னென்ன தெரியுமா?
ஜிமிக்கி பொண்ணு : ‘வாரிசு' படத்தில் அனிருத் - ஜோனிதா காந்தி குரலில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல் ரசிகர்களை வரவேற்பை பெற்று 185 மில்லியன் வியூஸ் பெற்று கலக்கியது.
வா வாத்தி : அதிரடி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்தில் இடம்பெற்ற ‘வா வாத்தி’ பாடல் அமைதியாய் வந்து நெஞ்சங்களை அள்ளியது. ஸ்வேதா மோகன் குரலில் ஒலித்த இந்த பாடல் 166 மில்லயன் வியூஸ் பெற்றது.
நான் ரெடி தான் : அனிருத் இசையமைத்து நடிகர் விஜய் 'லியோ' படத்தில் பாடிய 'நான் ரெடி தான்...' பாடல் கடந்த ஆண்டின் சரியான ஹிட் பாடலாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி தீர்த்தனர். இது 239 மில்லியன் வியூஸ் பெற்றது.
காவாலா : தெறிக்கவிடும் இசையில், தமன்னாவின் அல்டிமேட் டான்சில், ரஜினிகாந்தின் அட்டகாசமான என்ட்ரியோடு பின்னி பெடலெடுத்தது 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல். இந்த தெறிக்கவிடும் பாடல் 366 மில்லியன் வியூஸ் பெற்று டாப் 5 லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
ரஞ்சிதமே ரஞ்சிதமே : தமன் இசையில் 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் கடந்த ஆண்டின் பெப்பியான பாடல்கள்களின் வரிசையில் பட்டி தொட்டி எங்கும் கலக்கியதோடு 372 மில்லயன் வியூஸ் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.